கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கும் அதியா ஷெட்டிக்கும் சென்ற 23 ஆம் தேதி சுனில் ஷெட்டியின் பண்ணைன் வீட்டில் திருமணம் நடைபெற்று முடிந்தது.
இவர்களது திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர், மேலும் இவர்களது திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள மற்றும் கிரிக்கெட் வீரர்கள் என அனைவரும் கோடி கணக்கில் பரிசு பொருட்களை அளிக்குவித்துள்ளனர்.
அதியா ஷெட்டிக்கும், கே.எல்.ராகுலுக்கும் திருமணம் முடிவடைந்த நிலையில் இருவருக்கும் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய பிரபலங்கள் கோடிக்கணக்கில் பரிசுகளை அள்ளி குவித்துள்ளனர். இதில் பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டி தனது மகளின் திருமண பரிசாக சுமார் 50 கோடி மதிப்பில் பங்களா ஒன்றை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் அனைவரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பரிசுகளை வழங்கியுள்ளனர். அதில் விராட் கோலி கே.எல்.ராகுலுக்கு பிஎம்டபிள்யூ காரை பரிசளித்திருக்கிறார், இதையடுத்து மகேந்திர சிங் தோனியும் கவாஸாகி நிஞ்சா என்ற பைக்கை பரிசளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பாலிவுட் நடிகரான சல்மான் கான் ஆடி காரையும் பரிசளித்துள்ளார் இதன் மதிப்பு சுமார் 1.64 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை தொடர்ந்து நடிகர் ஜாக்கி ஷெராஃப் 30 லட்ச மதிப்பில் வாட்ச் ஒன்றையும், நடிகர் அர்ஜூன் கபூர் விலையுயர்ந்த வைர பிரேஸ்லைட்டையும் பரிசாக வழங்கியுள்ளார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு மும்பையில் பிரம்மாண்ட முறையில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது மேலும் 3000 பேருக்கு விருந்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கே.எல்.ராகுலுக்கும் , அதியா ஷெட்டிக்கும் திருமணம் முடிவடைந்த நிலையில் தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் கடும் வைரலாகி வருகிறது.