27.7 C
Tamil Nadu
28 May, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

மதம் வைத்து விமர்சனம் – குக்வித் கோமாளி மணிமேகலை காட்டம்!

ஆரம்ப கட்டத்தில் சன்மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் நடிகை மணிமேகலை.

அதற்கு பின் திரைப்பட பாடல்களில் நடனம் புரியும் உசைன் என்பவருடன் காதல் ஏற்பட்டதில், இருவரும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்டு சொல்லப் போனால் இவர்களது காதல் கதை அனைவருக்குமே தெரிந்திருக்கும் ஏனெனில் மணிமேகலை இது குறித்து பேசாத இடமே கிடையாது.

ஆர்மபத்தில் சன் டிவியில் பணியாற்றி வந்த மணிமேகலை, அடுத்ததாக விஜய் டிவிக்கு சென்றார், அவ்வப்போது நிறைய ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றதன் மூலம் மக்களிடையே அறிமுகமானார், இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவாகி வந்தது. இருப்பினும் இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அனைத்திலும் தனது காதல் குறித்த வரலாற்று கதையை ஏதேனும் ஓர் முறையில் தெரிவித்து விடுவார், இதனைத்தொடர்ந்து இவர்கள் இருவரின் ஜோடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் சமூக வலைத்தளங்களில் படையெடுக்க தொடங்கினர். மேலும் இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி அனைவரையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால், விஜய் டிவி இவர்களுக்கு நிறைய சொந்தங்களை அள்ளி கொடுத்து வந்தது.

இதற்கு பின்னதாக மணிமேகலை குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு மக்கள் மனதில் நிலைத்து நின்றார். இந்நிகழ்ச்சி மூன்று சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கி ஒளிபரப்பாகி வரும் நிலையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் மணிமேகலை. இது குறித்து தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தார் மணிமேகலை.

இதனிடையே மணிமேகலை தனது வீட்டாரை எதிர்த்து திருமணம் செய்திருந்தாலும் , தன் வீட்டார் முன் நல்ல நிலைமையில் இருக்க வேண்டுமென பல வேலைகளில் தனது கவனத்தை செலுத்தி இன்று இருவரும் மீடியாத்துறையில் ஓர் நல்ல நிலைமையில் இருந்து வருகின்றனர். குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி தற்போது மணிமேகலை தனது சொந்த ஊரில் ஓர் இடம் வாங்கி விவசாயத்தை தொடங்கி வருகிறார். இதற்காக ரசிகர்களும் அவர்களுக்கான வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அடையாளம் தெரியாத பயணாளி ஒருவர் மணிமேகலை உசைனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எப்படி தொடங்கியது இப்படி முடிந்திருக்கிறது, லவ் ஜிகாத் என குறிப்பிட்டு மதமென பிரிந்தது போதும் என பதிவிட்டிருந்தார், இதனை கண்ட மணிமேகலை இது போன்று வாழ்க்கை முழுவது உலறிக் கொண்டே இருப்பதற்க்கு , உறுப்புடுகிற வேலை எதாவது இருந்தால் பார்க்கலாம் அல்லவா என காட்டமாக பதிலளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி தற்போது கடும் வைராலாகி வருகிறது.

See also  விக்னேஷ் சிவனை கலாய்த்த அமைச்சர் உதயநிதி!...

Related posts