தமிழ் சினிமாவின் ஜாம்பாவனான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தன்னுடையெ 72 பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகிறார்.
நடிகர் ரஜினி எப்பொழுதும் தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டின் முன்பு தனது ரசிகர்களை சந்திப்பது வழக்கம் , அந்த வழக்கத்தின் அடிப்படையில் இன்றும் நடிகர் ரஜினி ரசிகர்களை சந்திக்க உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே நடிகர் ரஜினிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டிவிட்டர் பக்கத்தில் – என் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல்நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.