விஜய் நடிப்பில் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில்ராஜு தயாரிப்பில் வாரிசு திரைப்படமானது தயாராகி பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் உள்ள தயாரிப்பாளர்கள் மகர சங்கராந்தி ( பொங்கல் அன்று ) வெளியாகும் திரைப்படங்களில் திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்போம் என சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து வந்தனர்.
இது குறித்து நேற்று தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசி உள்ளனர்.
அப்போது, தெலுங்கில் வாரிசு திரைப்படம் வெளியாவதில் எந்தவித சிக்கலும் இல்லை என அந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சங்கத்தில் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய நான்கு திரைத்துறையைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது…