இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இதனுடன் சில முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதனிடையே வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலகலமாக நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் விஜய்யை காண்பதற்காக படையெடுத்து குவிந்து வந்தனர். மேலும் இந்நிகழ்ச்சிக்கு பல நடிகர் , நடிகைகளும் வருகைத்தந்தனர்.
இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சரத்குமார், மேடையில் பேசியதாவது, விஜய் தான் எதிர்காலத்தின் சூப்பர் ஸ்டார் என சூர்ய வம்சம் படத்தின் 175 நாள் விழாவின் பொழுது கூறினேன், இதனை நான் சொல்லிக்கொண்டே இருந்த பொழுது கலைஞர் கருணாநிதி ஆச்சரியப்பட்டார். ஆனால் அது தான் இன்று நடந்து கொண்டிருக்கிறது, விஜய் தான் சூப்பர் என கூறினார். இவர் சொன்ன பொழுது நேரு உள் விளையாட்டு அரங்கமே ரசிகர்களின் சப்தத்தால் அதிர்ந்து போய்விட்டது. இவரை தொடர்ந்து இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களும் விஜய்யை குறித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.