பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த 11-ம் தேதி திரைக்கு வந்தது. வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பான ‘வாரசுடு’ கடந்த 11-ம் தேதி வெளியாகாமல், 14-ம் தேதி திரைக்கு வந்தது. மேலும் ஆந்திரா-தெலுங்கானாவில் வாரிசு படமும் 14-ம் தேதி தான் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுக்க வெளியான நிலையில் குடும்ப ரசிகர்கள் மத்தியில் அனைத்து பகுதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் வாரிசு பட குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இதில் நடிகர் விஜய்யுடன் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், பாடலாசிரியர் விவேக், நடிகர் ஷ்யாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சமீபத்தில் தெலுங்கில் வாரசுடு படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு, கேக் வெட்டி, பட்டாசு வெடித்தும் இயக்குநர் வம்சி பைடிபள்ளி, தயாரிப்பாளர் தில் ராஜூ கொண்டாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.