ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டைட்டானிக். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. இத்திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் நிறைவடைந்தும் மக்கள் மத்தியில் இத்திரைப்படம் பேசப்பட்டு வருகிறது.
ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த டைட்டானிக் திரைப்படம் பல விருதுகளை வென்றுள்ளது. அதுமட்டுமல்லாது வசூல் ரீதியாகவும் இத்திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது, பல ஆஸ்கார் கோல்டன் குளோப் போன்ற பல விருதுகளை தட்டி சென்றது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவரும் படங்கள் அனைத்திற்குமே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும். இதனைப் போலவே அவதார் திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஜேம்ஸ் கேமரூன் , இத்திரைப்படத்தின் வசூல் டைட்டானிக் திரைப்படத்தின் வசூல் சாதனையை அவதார் திரைப்படம் முறியடித்தது.
இதனிடையே டைட்டானிக் திரைப்படம் உருவாகி வெகு ஆண்டுகள் ஆன நிலையில் அதனை 3 டி முறையில் வெளியிடுவதற்கு படக்குழு அனைத்து முயற்சிகளையும் ச்ய்து வந்தது. இந்நிலையில் தான் ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அவதார் தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் மிகப்பெரிய பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாக்கப்பட்டது, அதுமட்டுமல்லாது ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில் டைட்டானிக் திரைப்படத்தை 3டியில் வெளியிட்டால் டைட்டானிக் திரைப்படத்தின் வசூலில் பாதிப்பை ஏற்படுத்தக்கக் கூடுமோ என்ற நோக்கத்தில் தற்போது டைட்டானிக் திரைப்படத்தை வரும் பிப்ரவரி மாதம் வெளியிட இருப்பதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் பிப்ரவரி 10 ஆம் தேதி திரையரன்குகளில் 3டி முறையில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் , 3டியில் டைட்டானிக் திரைப்படமா? அப்பொழுது புதிய காட்சிகள் கிடைக்குமா என உறைந்துபோயியுள்ளனர், மேலும் ரீமாஸ்டர் செய்யப்பட்ட டைட்டானிக் படத்தின் ட்ரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி வருகிறது.