தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தில் இருந்து 2 பாடல்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. ‘ரஞ்சிதமே’ பாடலைத் தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி விஜய்யின் 30 வருட திரைப்பயணத்தை முன்னிட்டு ‘வாரிசு’ படத்தின் 2-ம் பாடலான ‘தீ தளபதி’ பாடல் வெளியானது. இந்த 2-வது பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி உள்ளார்.
ஏற்கனவே படப்பிடிப்பு தளத்தில் லீக்கான வீடியோவால் விஜய் பாடிய ‘ரஞ்சிதமே’ பாடலை முதல் பாடலாக வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்தும் வீடியோக்கள் லீக் ஆனதால் 2-ம் பாடலாக ‘தீ தளபதி’ என்ற பாடல் வெளியாக இருக்கிறது.
‘ரஞ்சிதமே’ பாடல் யூடியூப்பில் 8.9 கோடி பார்வைகளையும், 21 லட்சம் லைக்குகளையும் பெற்ற நிலையில் தீ தளபதி பாடல் வெளியாகிய 6 நாட்களில் 2 கோடி பார்வைகளும் 11 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
பிரேமம் அளவிற்கு எதிர்பார்த்தோமே ஏன்? – அல்போன்ஸுக்கு ட்விட்டரில் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!