விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாரிசு, இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தானா நடிந்திருக்கிறார். இதனுடன் பல முக்கிய நட்சத்திரங்கள் வாரிசு படத்தில் நடித்துள்ளனர்.
விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைத்தேடி தராத நிலையில் , கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இதனை தொடர்ந்து வெளிவர இருக்கும் வாரிசு திரைப்படத்திற்காக ரசிகர்கள் அதிக அளவு எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
இதனிடையில் வாரிசு திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தது. வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் , நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு திரைப்படத்தையும் வரும் பொங்கல் அன்றே திரையிட இருப்பதாக படக்குழு தெரிவித்திருந்தது. இந்த தகவல் வெளிவந்த நாளிலிருந்து விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் எப்படம் ஜெய்க்கும் என போட்டியிட்டு வருகின்றனர்.
மேலும் வாரிசு படத்தின் சிங்கிள் , போஸ்டர் , பாடல் , என வெளியிடப்பட்டத்தில் ரசிகர்கள் உற்சாகமடைந்து வந்தனர். இந்நிலையில் இன்று வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. கடந்த சில வருடங்களாக் நடிகர் விஜய் ஆடியோ லான்ச்சில் பல கருத்துக்களை ரசிகர்களோடு பகிர்ந்து வருகிறார். இதனைக்கானவே ஏராளமான ரசிகர்கள் படையெடுத்து செல்கின்றனர். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று மாலை நேரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக ரசிகர்கள் காலை முதலே நேரு உள்விளையாட்டு அரங்கில் காத்து வருகின்றனர்.