சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாலு மகேந்திரா ஸ்டுடியோவில் “தீ இவன்” படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டது.
இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன் உள்ளிட்ட படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
அங்கு பேசிய நடிகை சன்னி லியோன்…
தீ இவன் படத்தில் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் முறையாக தமிழகம் (சென்னை) வந்த போதும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது.
இந்த படத்தில் பாடல் படமாக்கப்பட்ட அனுபவம் நன்றாக இருந்ததாகவும், எல்லோரும் நன்றாக ஒத்துழைப்பு கொடுத்ததாகவும் கூறினார்.
தென்னிந்திய சினிமாவில் உங்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் யார் என்ற கேள்விக்கு; ரஜினிகாந்த் என்று பதில் அளித்தார். அவருடைய நடிப்பு, பேச்சு எல்லாம் ரொம்ப பிடிக்கும் என்றும் ஆங்கிலத்திலேயே பேச, தமிழில் ஏதாவது பேசுங்கள் என்று பத்திரிகையாளர் கேட்டதற்கு வணக்கம் என்று தமிழில் பேசியதுடன், பத்திரிகையாளர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்.