1995-ல் ‘முறை மாமன்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சுந்தர்.சி, அடுத்தடுத்து முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, ரஜினியின் அருணாசலம், அஜித்தின் உன்னைத் தேடி போன்ற படங்களை இயக்கினார். ‘தலைநகரம்’ படம் மூலம் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த சுந்தர்.சி, கடைசியாக ‘காஃபி வித் காதல்’ படத்தை இயக்கினார். கடந்த 4-ம் தேதி வெளியான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் சங்கமித்ரா என்ற பிரம்மாண்டமான படம் இயக்க முடிவு செய்தார் சுந்தர்.சி. ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாக இருந்த இந்த படத்தின் தற்போதைய நிலை என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவுமில்லை.
இந்நிலையில், அடுத்த படத்தை SCIENCE FICTION படமாக எடுக்க முடிவெடுத்துள்ளார் சுந்தர்.சி. மேலும் இந்த படத்தை லைகா தயாரிப்பில் உருவாக உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.