தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.
விஜய்யின் 30 வருட திரைப்பயணத்தை முன்னிட்டு நாளை வாரிசு படத்தின் 2-ம் பாடல் வெளியாக உள்ளது. மேலும் 2-வது பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி உள்ளதாகவும் தற்போது படக்குழு அறிவித்துள்ளது. அடுத்தடுத்து வெளியாகும் வாரிசு படத்தின் அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
அதை கொண்டாடும் விதமாக திரையுலகினரும் ரசிகர்களும் விஜய்யின் ’30 Years of Vijayism’ போஸ்டரை பகிர்ந்து மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர்.
’30 Years of Vijayism’ சிறப்பு போஸ்டரை வாரிசு படத்தின் நாயகியான, ராஷ்மிகா மந்தனா வெளியிட்டார். அதோடு மட்டுமில்லாமல் சில திரையரங்குகளில் ஏற்கனவே வெளியான விஜய்யின் படங்களை நாளை திரையிட உள்ளனர்.
சென்னை ரோகினி திரையரங்கில் மெர்சல் திரைப்படத்தை வெளியிட உள்ளனர். அதற்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகி ஹவுஸ்புல்லோடு திரையிடப்படுகிறது. நெல்லை ராம் முத்துராம் சினிமாஸ் திரையரங்கில் மாஸ்டர், மதுரையில் துப்பாக்கி, அமிர்தமில் மெர்சல் என விஜய்யின் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
மேலும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 24-ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.