பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடபட்டு இருக்கும் சுற்றறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கற்றல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக நடுநிலை,மேல்நிலை,உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.
அதன்படி, வருகிற 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு பள்ளிகளின் ” shawaas ” என்கிற மராத்தி மொழி திரைப்படத்தினை ஒளிபரப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி 3.12.2022 பள்ளி நாளாக இருந்தால் அன்று ஒளிபரப்பு வேண்டும் என்றும் அல்லது விடுமுறையாக இருந்தால் வரும் திங்கள்கிழமை ஒளிபரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு சார்பில் சாவாஸ் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமாகும்.அதன்படி வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் இந்த திரைப்படம் ஆறாவது இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. என இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.