RRR திரைப்படத்தின் நாட்டு நாட்டு நாட்டு பாடல் சர்வதேச அளவில் பல்வேறு விருதுகள் அள்ளிக் குவித்தது. கோல்டன் குளோப் உள்ளிட்ட மிக உயரிய விருதுகளை இந்த பாடல் வென்றது. இந்நிலையில் ஆஸ்கர் விருது நிச்சயம் வெல்லும் என்று இந்திய திரைத்துறை எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இன்று நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
பிரபல இசையமைப்பாளர் கீரவாணியின் இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமடைந்த நிலையில் 2023 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நான் செஞ்சஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருது இயக்குனர் கீழவாணி ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெற்றுக் கொண்டார்.