வாரிசு படத்தின் ரஞ்சிதமே… ரஞ்சிதமே.. பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், விஜய் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். குடும்ப கதையை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்நிலையில் ‘வாரிசு’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரஞ்சிதமே’ பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ரஞ்சிதமே.. முழு பாடலையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் மானசி இணைந்து பாடிய ரஞ்சிதமே…ரஞ்சிதமே… மனச கலைக்கும் மந்திரமே.. பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த பாடலில் நடிகர் விஜய் துள்ளலான நடனம் இடம் பெற்றுள்ளது. அவருடன் ராஷ்மிகா மந்தனாவும் இணைந்து நடனமாடியுள்ளார்.