சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 72 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரின் வீட்டின் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
12.12.2022 தினமான இன்று ரஜினிகாந்தின் 72 வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
பிளாக் அண்ட் ஒயிட்,கலர், டிஜிட்டல், அனிமேஷன்,3D என சினிமாவின் ஐந்து பரிமாணத்திலும் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவரது பிறந்த நாள் விழாவை கொண்டாட இரவு 12 மணி முதலிலேயே போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பாக கேக் வெட்டி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை தொடங்கினர்.
அதன்படி தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் தற்போது அவரது வீட்டில் முன்பாக கேக் வெட்டுவது, இனிப்புகள் வழங்குவது, ரஜினிகாந்த் பாடல்களுக்கு நடனம் ஆடுவது, இனிப்புகள் வழங்குவது, 2023 ஆம் ஆண்டு காலண்டர் வழங்குவது வகையில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ரஜினிகாந்த் நடித்த பல்வேறு திரைப்படங்களின் கெட்டப்பில் வந்து நடனம் ஆடுவது உள்ளிட்ட கொண்டாட்டங்களில் ஈடுபட்டுனர்.
இருந்த போதும் ரஜினிகாந்த் தற்போது சென்னையில் இல்லை என்றும், அவர் ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் உள்ளார் என்று தகவல் வெளியானது.
ஆனாலும் அவரது ரசிகர்கள் கொட்டும் மழையிலும் அவரை பார்க்காமல் செல்ல மாட்டோம் என நடமிடித்து அவர் வீட்டின் முன்னரே தலைவா வெளியே வா, என கோஷமிட்டபடி காத்திருந்தனர்.
இதனால் ஒரு கட்டத்தில் வீட்டின் வெளியே வந்த ரஜினிகாந்தின் மனைவி லதா தற்போது சார் வீட்டில் இல்லை அவர் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று உள்ளார்.
அதனால் யாரும் மழையில் நனைத்து காத்திருக்காமல் அனைவரும் பத்திரமாக வீட்டுக்கு செல்லுங்கள் என்றும் வந்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.
இதனால் அங்கு கூடியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலைந்து சென்றனர்…