26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CinemaCinema News

ரோபோ ஷங்கருக்கு 22-வது திருமண நாள் – சர்ப்ரைஸ் கொடுத்த சூப்பர் ஸ்டார் !

தனியார் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் ரோபோ ஷங்கர். தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கலைக்குடும்பமாக வலம் வரும் ரோபோ ஷங்கர் மற்றும் ப்ரியங்கா தம்பதிக்கு இன்று 22-வது திருமண நாள். இதனை முன்னிட்டு சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற அனுமதி கேட்டு இருந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இருந்து அழைப்பு வர குடும்பத்துடன் சென்று அவரிடம் வாழ்த்து பெற்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ரோபோ ஷங்கரின் குடும்பத்திற்கு இந்த சர்ப்ரைசை அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

See also  ஜெயிலர் படப்பிடிப்புக்காக ஹைதராபாத் புறப்பட்டார் ரஜினிகாந்த்!

Related posts