கல்கியின் புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படமாக்கப்பட்டு சமீபத்தில் வெளியானது.இயக்குனர் மணிரத்னம் இத்திரைப்படத்தை இரண்டு பாகங்களாக எடுத்து அதில் முதல் பாகத்தை மட்டும் வெளியிட்டு இருந்தார்.
வரலாற்று நாவல் என்பதால் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்று பார்க்கப்பட்டது, இதில் முக்கிய நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்தனர். த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் , ஜெயம் ரவி , ஜெயராம் , கார்த்தி ,விக்ரம் உள்ளிட்ட முக்கிய பலர் நடித்திருந்தனர். இதற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெளிவந்ததை தொடர்ந்து முதல் மூன்று வாரத்திற்கும் மேல் டிக்கெட்டுகள் முழுவதுமாக புக் செய்துவந்தனர். இத்திரைப்படத்திற்கு முதற்காட்சி , இரவுக்காட்சி என தியேட்டர்கள் அனைத்தும் நிரம்பி வழிந்து காணப்பட்டது. இதனிடையே பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் 90 நாட்கள் குறித்து வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்திருந்த நிலையில் , தற்போது பொன்னியின் செல்வன் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை நாளை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பொன்னியின் செல்வன் படத்தின் புதிய அறிவிப்பு நாளை மாலை 4 மணியளவில் வெளியாகும் என அறிவித்து படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதில் ரசிகர்கள் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பாக இருக்குமோ என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.