கல்கி எழுதிய பிரம்மாண்ட நாவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் பொன்னியின் செல்வன். இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனை இரண்டு பாகமா எடுத்திருந்த நிலையில் அதில் முதல் பாகத்தை மட்டும் வெளியிட்டு இருந்தார் மணிரத்னம். இதையடுத்து 90 நாட்கள் கழித்து பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து நேற்று திடீரென பொன்னியின் செல்வன் படக்குழுவினர் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவதாக தெரிவித்து இருந்தனர், அதன் அடிப்படையில் இன்று பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தை ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முதல் பாகத்திற்கே அமோக வரவேற்பு கொடுத்து வந்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் இரண்டாம் பாகத்திற்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இத்தகவலை படக்குழு வெளியிட்டிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
பொன்னியின் செல்வன் வரலாற்று கதையை கொண்டு திரைப்படமாக்கப்பட்டதால் மக்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பை இத்திரைப்படத்தின் மீது வைத்து வருகின்றனர். முதல் பாகமே வெற்றியடைந்த நிலையில் இரண்டாம் பாகத்தை காண்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.