26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
Cinema News

நடிகர் சிம்பு நடிக்கும் “பத்து தல” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இந்த பக்கத்துல படத்தை இயக்கியுள்ளார்.

ஏ.ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர், கலையரசன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ஏற்கனவே டிசம்பர் 14 ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் காட்சிகள் முழுமையாக முடிக்கப்படாததால் அந்த தேதி தள்ளிப் போவதாக சினிமா வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று படத்தின் அனைத்து படப்பிடிப்பு காட்சிகளும் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  ஜெயிலர் திரைப்படத்தில் மோஹன்லால்!!

Related posts