இருவரும் இன்று சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களை சந்தித்து தங்களது திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.
அப்போது,கௌதம் கார்த்திக் முதலில் காதல் கூறியதாகவும் இரண்டு நாட்கள் கழித்து அந்த காதலை மஞ்சிமா மோகன் ஏற்றுக் கொண்டதாகவும் மேடையில் தெரிவித்தனர்.
தங்கள் திருமணத்தை பெரிதாக நடத்தாமல் சிறிய அளவிலேயே நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் இருதரப்பு குடும்பங்களிலும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதாகவும் மேடையில் தெரிவித்தனர்.
வேறு மாநிலத்தில் இருந்து வந்தால் சிறிய ஒரு பயம் இருக்கும், ஆனால் தமிழ்நாட்டில் தன்னுடைய முதல் படத்திலிருந்தே தனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்து வருகிறீர்கள் என்று மஞ்சிமா மோகன் பேசினார்.
தேவராட்டம் படத்துக்குப் பின்பு ஒரு வருடம் கழித்து தாங்கள் காதலித்ததாகவும் திருமணத்துக்கு பின் சினிமாவில் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் தற்போது திரைப்படங்கள் எதுவும் கையில் இல்லை எனவும் மஞ்சிமா மோகன் கூறினார்.
கௌதம் கார்த்திக் நடித்த படங்களில் ரங்கூன் மற்றும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் ஆகிய இரண்டு படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என மஞ்சிமா மோகன் தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்குப் பின் மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் தற்போது கொடுத்து வரும் ஆதரவை தொடர்ந்து தருமாறு கேட்டுக் கொண்டு விழா மேடையில் இருந்து விடைபெற்றனர்.