நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி படத்திற்கான பூஜை போடப்பட்டு, ப்ரோமோ காட்சிகளும் படமாக்கப்பட்டன. பூஜை நடந்ததற்கான வீடியோவை படக்குழு வெளியிட்டது.
கடந்த டிசம்பர் மாதமே நடிகர் விஜய்யை வைத்து படத்திற்கான ப்ரோமோ காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், அந்த காட்சிகள் மற்றும் அனிருத்தின் பின்னணி இசையோடு லியோ என்ற படத்தின் தலைப்போடு ப்ரோமோவை வெளியிட்டது படக்குழு. மேலும் இத்திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
முதற்கட்ட படிப்பு ஜனவரி முதல் வாரத்தில் சென்னையிலும், இரண்டாம் கட்டமாக அதே மாதத்தில் கொடைக்கானலிலும் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக விஜய் உள்பட படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றது. அதற்கான வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது படக்குழு. காஷ்மீரில் 75 நாட்கள் படமாக்கப்பட திட்டமிட்டதில் 1000-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களை கொண்டு படத்தின் முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் காஷ்மீர் படப்பிடிப்பில் நடிகர் விஜய் நடந்து செல்வது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட் என டிப்டாப்பாக கூலிங் க்ளாஸ் அணிந்து கொண்டு வருவது போன்ற காட்சி வெளியாகி இருக்கிறது. அவரது அருகில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் யாரையோ விலகிச் செல்லும் படி கூறுவதும் இந்த 4 விநாடிக் காட்சியில் பதிவாகி உள்ளது.