கன்னடத்தில் மட்டுமில்லாமல் உலகையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படமாக KGF படத்தில் 2 பாகங்களும் அமைந்திருந்தது. யாஷின் மாஸ் நடிப்பில் உருவான இத்திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் பம்பர் ஹிட் அடித்தன. மேலும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியான காந்தாரா திரைப்படம் “இந்திய சினிமாவின் மாஸ்டர் பீஸ்” என ரஜினியிடம் பாராட்டைப் பெற்றது. இந்த திரைப்படங்களை தயாரித்து HOMBALE FILMS தயாரிப்பு நிறுவனம் திரையுலகில் கோலோச்சி வருகிறது.
இந்நிலையில் HOMBALE FILMS தயாரிப்பு நிறுவனமானது முதல் முறையாக நேரடி தமிழில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பெண்ணை முன்னணி கதாபாத்திரமாக வைத்து உருவாக உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.