26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CinemaCinema News

ரஜினியை வைத்து படம் – லோகேஷ் கனக ராஜ்

சென்னை வடபழனியில் உள்ள (விஜயா போரம் மால்) வணிக வளாகத்தில் விஷாலின் லத்தி பட டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். லத்தி படத்தின் தமிழ் டிரைலரை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார், அதனை தொடர்ந்து தெலுங்கு லத்திப்பட ட்ரெய்லர் டிஜிபி ஜாங்கிட் வெளியிட்டார்.

விழா முடிந்த பின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்த போது,

தளபதி-67 படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும். வாரிசு திரைப்படம் வெளியான பிறகு கண்டிப்பாக போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அப்டேட் கிடைக்கும். படத்தில் நடிக்கும் நடிகர்கள் எல்லாம் முடிவாகி விட்டது. வாரிசு ரிலீஸ் பிறகு தான் எல்லாம் வெளியாகும். தளபதி-67 நல்ல கேங்ஸ்டர் படமாகவும் ஆக்சன் படமாகவும் இருக்கும் என்று பேசினார்.

See also  தளபதி 67 படத்தின் பூஜை !

மேலும் லோகேஷ் தயாரிப்பு நிறுவனம் தொடங்குவது குறித்து பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை. என்னுடைய உதவி இயக்குநர்கள் பலர் படம் பண்ண வேண்டியுள்ளது. தயாரிப்பு நிறுவனம் குறித்து கண்டிப்பாக சொல்லுவேன் என்று கூறினார்.

தொடர்ந்து, நல்ல கதை மற்றும் ரஜினியின் கால்ஷீட் கிடைத்தால் படம் எடுப்பேன். ரஜினியிடம் நிறைய பேசி உள்ளேன். ஆனால் எப்போது நடக்கும் என தெரியாது.

ஜனவரி மாதம் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அஜித்தின் சில்லா சில்லா பாடல் சிறப்பாக உள்ளது. மிகவும் பிடித்து இருந்தது. தீ தளபதி பாடல் பெரிய திரையில் பார்த்தேன் சிறப்பாக இருந்தது என்று கூறி லோகேஷ் கனகராஜ் விடைபெற்றார்.

Related posts