27.7 C
Tamil Nadu
28 May, 2023
Cinema News

ஆடை கலாச்சாரம் பற்றிய விவகாரம் : நடிகர் சதீஷ் விளக்கத்திற்கு தர்ஷா குப்தா மறுப்பு !

ஆடை கலாச்சாரம் பற்றி பேசியதற்கு கண்டம் எழுந்த நிலையில், நடிகர் சதீஷ் அளித்த விளக்கம் தனக்கு வருத்தமாக உள்ளதாக நடிகை தர்ஷா குப்தா தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்மையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் தர்ஷா குப்தா அணிந்து வந்த ஆடை குறித்து நடிகர் சதீஷ் மேடையில் நகைச்சுவையாக பேசினார். சன்னிலியோனோடு ஆடை குறித்து ஒப்பிட்டு பேசிய நடிகர் சதீஷ்-க்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், அதற்கு சதீஷ் விளக்கமளித்தார். அந்த விளக்கத்தில் தர்ஷா குப்தா சன்னிலியோன் போன்று ஆடை அணிந்து வந்ததாகவும், ஆனால் சன்னிலியோன் புடவையில் வந்துவிட்டதால் தான் அப்செட்டாகி விட்டேன் என கூறியுள்ளார். இதை மேடையில் சொல்லுங்கள் என தர்ஷா குப்தாவின் அனுமதியோடுதான் பேசினேன் என சதீஷ் விளக்கமளித்துள்ளார்.

See also  பொன்னியின் செல்வனின் புதிய அறிவிப்பு நாளை வெளியாகும் - படக்குழு திடீர் தெரிவிப்பு!!

இதனிடையே, சதீஷ் அளித்துள்ள விளக்கம் சரியில்லை என்றும் தனக்கு மிகவும் வருத்தமாக உள்ளதாகவும் தர்ஷா குப்தா தற்போது தெரிவித்துள்ளார். நடிகர் சதீஷ் இந்த விஷயத்தை என் பக்கம் திருப்பி விடுகின்றார், இது மிகவும் விசித்திரமான ஒன்று. யாராவது அவர்களைப் பற்றி அவர்களே மேடையிலே அசிங்கமாக பேச சொல்வார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சதீஷ் அளித்த விளக்கமும் தர்ஷா குப்தாவின் பதிலும் முரணாக இருப்பதால் மீண்டும் இந்த விவகாரம் சர்ச்சையாக மாறியுள்ளது.

Related posts