தமிழில் கடந்த 2019-ல் வெளியான கோமாளி திரைப்பட இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள லவ் டுடே திரைப்படம் கடந்த 4-ம் தேதி திரைக்கு வந்தது. வெளியான நாளில் இருந்து இன்று வரை நல்ல வரவேற்பை இத்திரைப்படம் பெற்று வருகிறது. இன்றைய காலகட்டத்தின் காதல் எப்படி இருக்கும் என்பதை கற்பனை கலந்த கதையாக, நகைச்சுவை பாணியில் திரைப்படமாக வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு தற்போது இளைஞர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.
அதனால் பல காட்சிகள் தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் ஆகும் சூழல் உருவாகி இருக்கும் நிலையில்
இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.