விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்களிடையே தனி வரவேற்பு உண்டு. தற்போது வரை 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6 வது சீசனை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது.
இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் , தற்போது நாமினேஷனில் வெளியேறியவர்கள் போக மீதம் 8 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர். கடந்த வாரத்தின் நாமினேஷன் பட்டியலில் இருந்த மணிகண்டன் மக்களிடம் குறைந்த வாக்குகளை பெற்றதன் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்பு யார் அந்த வெற்றியாளர் என்பதிலேயே இருந்து வருகிறது.
இதில் வெற்றியாளர் குறித்த பெரும்பாலான மக்களின் கருத்துக்கள் ஷிவின் மற்றும் விக்ரமனாகவே இருந்து வருகிறது. இதனிடையே இன்றைய நாளுக்கான ப்ரோமோ மக்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருகிறது.முதலில் கேப்டன்சி டாஸ்க் குறித்து வெளியானது. அதன்படி இந்த வாரத் தலைவராக ஏடிகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஏடிகே தலைவராகத் தேர்வானதால் , இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற கேள்வி மக்களிடையே அதிகளவில் எழுந்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்த நாளின் இரண்டாவது ப்ரோமோவாக – பிக்பாஸ் வீட்டின் போட்டியாளார்களிடம் கேள்வி ஒன்றை எழுப்புகிறார்.
இதில் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் இதுவரை கடந்து வந்த நாட்களில் என்ன செய்தீங்க என கேள்வி எழுப்புகிறது. இதற்கு போட்டியாளர்கள் கூறும் பதில் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருந்தால் இந்த வார நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என பிக்பாஸ் தெரிவித்தது. இதனடிப்படையில் போட்டியாளர்களிடம் கேட்கப்படும் கேள்வி ஒவ்வொன்றிற்கும் அவர்களின் பதில் சரியானதாக இல்லையெனில் பிக்பாஸ் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வது போன்ற ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருகிறது.