27.7 C
Tamil Nadu
28 May, 2023
CinemaCinema News

இந்தியாவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்த அவதார்-2?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் கடந்த 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 3டி தொழில்நுட்பத்தில் உருவான இந்த படத்தின் காட்சிகளை பார்த்தவர்கள், பிரம்மிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் காட்சியமைப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியானது. இந்தியாவைப் பொறுத்தவரை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனங்களையே பெற்று வருகிறது.

மேலும் படத்தின் விநியோகஸ்தர், 75% பங்கு கேட்டதால் தமிழ்நாட்டில் முக்கியமான பல திரையரங்குகளில் இத்திரைப்படம் திரையிடப்படவில்லை. அதுமட்டுமில்லாமல் அவதார்-2 வெளியாகி கலவை விமர்சனங்களையே பெற்று வருகிறது.

இந்நிலையில் அவதார்-2 திரைப்படம் வெளியான 2 நாட்களிலேயே இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் 1,500 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

See also  10,11,12 ஆம் வகுப்புகளுக்கு பொதுதேர்வு முடிவு எப்போது என தெரிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் !

Related posts