நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ள லால் சலாம் திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ளார்.
கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர் ரகுமான் ஆகியோர் இணைந்து மும்பையில் இசைப் பணியில் ஈடுபட்டுள்ள காட்சியை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். மேலும் அதில் நம்பிக்கையான இயக்குனர் உடன் எனவும் பதிவிட்டுள்ளார்.