27.7 C
Tamil Nadu
28 May, 2023
CinemaCinema News

நடிகை டாப்சி, சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவிப்பு!

தமிழ் மற்றும் இந்தி என டாப்சி அதிக படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். நடிகை டாப்சி தமிழில் பல படங்கள் நடித்து இருந்தாலும் இந்தியில் தான் படங்கள் வாய்ப்பு குவிந்து வருவதாக சொல்லப்படுகிறது.

மேலும் நடிகை டாப்சிக்கு வெளிப்படையாக பேசும் இயல்பு பொதுவாகவே இருக்கும் நிலையில் , சினிமாத்துறையில் இவர் ஏதேனும் வெளிப்படையாக பேசி வந்தால் சர்ச்சைகளில் சிக்கி விடுகிறார். இதனால் ரசிகர்கள் இவருக்கு திமிரு பிடித்தவர் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். அவரை தொடர்ந்து அவதூறு பேச்சுகளாலும் பேசி வந்தனர். இது நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் நடிகை டாப்சி இது குறித்து பேட்டி ஒன்று அளித்திருக்கிறார்.

அதில், சில நடிகைகள் நடிகர்கள் போன்று கேமாராவிற்கு முன் நடிப்பது மட்டுமல்லாமல் பின்னுக்கும் நடிப்பார்கள் அது போன்று நான் இல்லை. எப்பொழுதுமே நேர்மையாக தான் இருப்பேன் , ஆனால் என்னை நிறைய நபர்கள் விமர்சிப்பது தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. இது மிகவும் வேதனை அளிக்கிறது. எனவே இதற்கு மேல் சமூகவலைத்தளங்களில் நான் இருக்க கூடாது என முடிவுசெய்திருக்கிறேன். அப்படி இருந்தால் என்னை பற்றிய தகவல்களை தேடுவது கடினம் தானே, நான் பாரட்டுக்கு அலைபவள் கிடையாது , எனக்கு பிடித்தது போல் தான் என்னால் இருக்க இயலும் . நல்ல பெயர் வாங்க வேண்டுமென்று இங்கு பல நட்சத்திரங்கள் வெளியேயையும் நடித்து தான் வருகிறார்கள். எல்லோருக்கும் என்னை பிடிக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை , ஒரு நடிகை என்ற அடிப்படையில் என்னை , எனது நடிப்பிற்காக பாராட்டினாலே போதுமானது என்றார்.

See also  விடுதலை திரைப்படத்தை பார்த்து வியந்துபோன நடிகர் ரஜினிகாந்த்!..

Related posts