இயக்குனர் எம்.சரவணன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா நடித்திருக்கும் திரைப்படம் ராங்கி. இதற்கு முன் இவர் நடித்திருந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இதன் மூலம் ரசிகர்களின் மனதில் குந்தவையாக அமர்ந்த த்ரிஷா , தற்போது தனியாக ஒரு படமெடுத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசர், ட்ரைலர் என வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து ராங்கி படத்தில் பல சர்ச்சை காட்சிகள் இருப்பதாக கூறி தணிக்கை குழு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் படத்தில் இருந்து 30 காட்சிகளை நீக்கிவிட்டு தற்போது தணிக்கை குழு ராங்கி படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே வரும் 30 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ராங்கியை தொடர்ந்து நடிகை திரிஷா படத்தின் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதன்படி செய்தியாளர்களை சந்தித்த திரிஷா நான் திரைக்கு வந்து 20 வருடங்கள் நிறைவடைந்திருக்கிறது. இருப்பினும் ஒரு இடத்திலும் எதிர்மறையான கருத்துக்களை தெரிவித்ததும் இல்லை, அதனை கவனித்ததும் இல்லை. இதுவரை நேர்மறையான கருத்துக்களை மட்டுமே நான் எடுத்து வருகிறேன் . ஆனால் தற்போது நான் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பல வதந்திகள் பரவி வருகிறது. அதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை , எனக்கும் அரசியலுக்கும் துளியளவும் சம்மதம் இல்லை.
இதனை தொடர்ந்து செய்தியாளார்கள் திரிஷாவிடம் உங்களுக்கு பிடிக்காத கேள்வி என்ன என்று கேட்டதற்கு , என்னிடம் எப்பொழுது திருமணம் , உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்த கேள்விகள் எனக்கு புடிக்காது, இது குறித்த கேள்விகளை தவிர்ப்பது நல்லது என்றார்.