நடிகரும் பாடகருமான சித்தார்த் மதுரை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் அதிகாரிகள் தன்னை அவமானப்படுத்தியதாக குற்றச்சாடியுள்ளார். இது குறித்து நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளப் பக்கமான இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் , மதுரை விமான நிலையத்தில் அவமானப்படுத்தியதாக குறிப்பிட்டு இருந்தார்.
இது குறித்து நடிகர் சித்தார்த் தெரிவித்திருப்பதாவது, விமான நிலையத்தில் சோதனையில் ஈடுப்பட்டு வரும் சிஐஎஸ்எப் வீரர்கள் 20 நிமிடங்களாக எங்களை தொடர்ந்து காக்க வைத்து வந்தனர். மேலும் என் வயதான பெற்றோர்களின் பைகளில் இருந்த சில்லறை காயின்களை வெளியே எடுத்து வைத்து ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்துகொண்டனர் என்றார். இதையடுத்து நாங்கள் எவ்வளோ ஆங்கிலத்தில் பேசக்கூறியும் தொடர்ந்து அவர்கள் ஹிந்தியில் பேசி வந்தனர்.
இதுகுறித்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் , இந்தியாவில் இப்படித்தான் இருக்கும் என அவர்கள் பதிலளித்ததாகவும் தெரியப்படுத்தினார். இதனுடன் வேலையில்லாதவர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டுவதாகவும் ஸ்டோரியில் குறிப்பிட்டு இருந்தார். இன்ஸ்டகிராமில் வைக்கப்படும் ஸ்டோரி 24 மணி நேரத்தில் மறைந்து விடும் என்பதால் நடிகர் சித்தார்த் வைத்த ஸ்டோரியின் ஸ்கீரின் ஷார்ட் தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.