மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் பல படங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சையமானார். தமிழில் இவர் நடித்த படங்களில் ஆக்ஷன் , ஜகமே தந்திரம் . கார்கி போன்ற படங்களில் ஆரம்ப கட்டத்தில் நடித்து வந்தார்.
இது போன்ற படங்களில் நடித்த இவர் மக்களிடையே வரவேற்பு பெறாமலே இருந்து வந்த நிலையில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்துக்கொண்டார் என்றே சொல்லலாம். பொன்னியின் செல்வன் பூங்குழலிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவானது. மேலும் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்த இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தற்போது பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கட்டா குஸ்தி திரைப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் நாயகியாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வந்தார்.
விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருந்த கட்டா குஸ்தி திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக வெற்றி பெற்றது , வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனிடையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கைதி, மாஸ்டர், விக்ரம் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமடைந்த அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் இதய குறியீடுடன் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் காதலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இதில் சிலர் இருவரும் காதலிக்கிறார்களோ அதனை தான் இதய குறியீடு மூலம் தெரியப்படுத்துகிறார்களோ என்ற கேள்வியும் எழுப்பி வருகின்றனர். இருப்பினும் காதல் குறித்து ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து , கேள்விகள் எழுப்பி வரும் நிலையில் ஐஸ்வர்யா லட்சுமி இது குறித்து எந்த ஒரு பதிலும் அளிக்காமல் இருப்பது , இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பதை உறுதி செய்துள்ளது.