தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
தற்போது விக்ரம் திரைப்படத்தின் கேமியோவுக்கு பின்னதாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார். தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சூர்யா அடுத்தடுத்து பல படங்களை கைகளில் வைத்திருக்கிறார். இதன் காரணமாக சில படங்களுக்கு கால்ஷீட் ஒதுக்க முடியாமல் பலப் படங்களின் வாய்ப்புகளையும் தவறிவிட்டு வருகிறார்.
இதற்கிடையே பாலா இயக்கத்தில் இவர் நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்தும் சில பல கருத்து வேறுபாடுகள் காரணமாக படத்திலிருந்து விலகினார். இருப்பினும் ரசிகர்கல் வாடிவாசல் மற்றும் வணங்கான் திரைப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்புகளில் இருந்து வந்த சமயத்தில் வணங்கான் படத்தை சூர்யா கைவிட்டது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது.
இதனை தொடர்ந்து ஜோதிகாவும் திருமணத்திற்கு பின்னதாக ஓர் காலக்கட்டத்தில் திரைத்துறையை விட்டு விலகியிருந்தார். அதன் பின் சமீப காலமாக நடிப்பில் தனது ஆர்வத்தை செலுத்தி நடித்து வருகிறார். மேலும் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2டி எண்டர்டெயிண்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து தற்போது சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்பட படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வரும் நிலையில், மறுபுறம் ஜோதிகாவும் படப்பிடிப்புகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
இதனிடையே சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் சூர்யா, ஜோதிகா இருவர் குறித்த தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகிறது, அதில் சூர்யாவும் ஜோதிகாவும் தனது வீட்டை சென்னையிலிருந்து மாற்றி மும்பைக்கு குடியேறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா இருவரையும் மும்பையில் உள்ள பள்ளி ஒன்றில் சேர்த்திருப்பதாகவும், ஜோதிகா ஹிந்தி வெப் தொடர் ஒன்றில் நடித்து வருவதால் அதற்காக அவ்வீட்டை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தன் பிள்ளைகளுடன் அவ்வீட்டின் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளிவருவது போன்ற புகைப்படங்களும் , ஹோட்டலுக்கு செல்வது போன்ற புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்து ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீட்டை மும்பைக்கு மாற்றினாரா சூர்யா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும் சூர்யா நிரந்தரமாக மும்பையில் செட்டில் ஆகப் போகிறாரா எனவும் கேட்கப்பட்டு வரும் நிலையில் , அவரது தரப்பிலிருந்து இது குறித்து உறுதிப்படுத்தும் தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.