நடிகர் சந்தானம் நகைச்சுவை நடிகராக இருந்ததை அடுத்து தற்போது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ஒரு சிலதே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தற்போது பல படங்களில் கமிட்டாகி இருக்கும் நடிகர் சந்தானம் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார், இதனிடையே கடந்த ஞாயிறு அன்று தனது சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் நடிகர் சந்தானம் சாதாரணமான உடையில் புலிக்கு அருகே அமர்ந்து ஒரு வீடியோ ஒன்று எடுத்து பதிவிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து வீடியோவில் புலியின் வாலை பிடித்து அமர்ந்திருப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. மேலும் வீடியோவின் கேப்ஷனில் இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்பதையும் , புலிகாதல் மற்றும் பயண டைரிகள் எனத் தலைப்பிட்டு இருந்தார். இதனிடையே இந்த வீடியோ எடுத்தப் பகுதியை மட்டும் நடிகர் சந்தானம் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இதனை கண்ட பலரும் மிருகக்காட்சி சாலைகளை ஊக்குவிப்பதாக நடிகர் சந்தானத்தை விமர்சனம் செய்யத்தொடங்கி விட்டனர். மேலும் சிலர் விலங்குகளை கொடுமைப்படுத்துகிறார் எனவும் குற்றம்சாடிவந்தனர். இதையடுத்து இது என்ன வகையான பொறுப்பற்ற நடத்தை விலங்குகளை துஷ்பிரயோகம் செய்து வருகிறீகள் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.
previous post