விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர் சின்னத்திரையில் பல வேடங்களில் நடித்தவர் வெள்ளித் திரையில் வந்து உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் விஜயகாந்த் சிவாஜி போன்று மிமிக்கிரி செய்த அசத்த கூடியவர் .
தமிழ் சினிமாவில் தற்போது படு பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த ரோபோ சங்கர் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது .
கட்டுமஸ்தான உடலுடன் இருந்த ரோபோ சங்கர் உடல் மெலிந்து காணப்படுவதால் என்ன பிரச்சனையாக இருக்கும் என்று ரசிகர்கள் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. படத்திற்காக இப்படி உடல் எடையை குறைத்து உள்ளாரா அல்லது உடலில் ஏதேனும் பிரச்சினையா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.