சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 17 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி. இத்திரைப்படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் ஏக போகமாக இருந்து வருகின்றனர். இத்திரைப்படத்தை இயக்குனர் வாசு இயக்கி இருந்தார், மேலும் பல முக்கிய நடிகர்களும் நடித்திருந்தனர். நாசர், வடிவேலு, பிரபு , நயன் , ஜோதிகா உள்ளிட்ட முக்கிய பலர் நடித்து படத்துக்கு சிறப்பு சேர்த்தனர்.
இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வாசு கிட்டத்தட்ட சந்திரமுகி 2 ஆம் பாகத்தை எடுக்க 17 வருடங்களாக முயற்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சமீபத்தில் இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது உறுதியான நிலையில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து வாசு இயக்கும் சந்திரமுகி 2 ஆம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். பிரம்மாண்ட முறையில் லைகா நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வரும் நிலையில் எம்.எம். கீரவாணி இசையமைத்து வருகிறார். மேலும் சந்திரமுகி முதல் பாகத்தில் நகைச்சுவை நடிகர் வைகைப்புயலுக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது போன்று, அக்கதாபாத்திரம் இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து வருகிறது. நடிகர் வடிவேலும் இத்திரைப்படத்தில் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.
விறுவிறுப்பாக போய்க் கொண்டிருந்த சந்திரமுகி திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது சந்திரமுகி 2 ம் பாகத்தின், படப்பிடிப்பின் முதல் கட்டம் நிறைவடைந்து இருப்பதாக படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது. தற்போது இப்புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்கில் புகைப்படம் வெளியிட்டு சந்திரமுகி 2 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு செல்வதாக தெரியப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி முதல் பாகத்துக்கு மக்களிடையே இன்றளவும் வரவேற்பு அதிக வண்ணத்தில் இருந்து வருவதால் லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2 மக்களிடையே வரவேற்பு பெறுமா என்ற கேள்வி பலரிடத்திலும் தோன்றி வருகிறது. ஏனெனில் இதுவரை வெளிவந்த, ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகங்கள் பெரும்பாலும் தோல்வியையே சந்தித்து வருவதால் மக்கள் மத்தியில் இது குறித்த அச்சங்கள் தற்போது அதிகரித்து வருகிறது.