விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வாரம் ஒரு நபர் குறைவான பங்களிப்புகளின் கீழ் நாமினெட் செய்யப்பட்டு, மக்கள் அழிக்கப்படும் குறைவான வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்.
அதன் அடிப்படையில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் குறைவான வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். நேற்றைய தினம் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் குயின்சி வெளியேறினார். இதனை தொடர்ந்து இன்றைய நாளின் ப்ரோமோவை வெளியிட்டது விஜய் டிவி.
அதில் இந்த வார தலைவருக்கான டாஸ்க் குறித்த காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வாரத்தலைவர் போட்டிக்கு தனலட்சுமி, ஷிவின் மற்றும் மணிகண்டன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். அதில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கயிறு கொடுக்கப்பட்டு அதில் இரண்டு முடிச்சிகளும் போடப்படுகிறது. அதில் போட்டியாளர்கள் மூவரும் ஆளுக்கொரு கயிறை பிடித்துக்கொண்டு சக போட்டியாளர்களின் கயிற்றில் உள்ள முடிச்சுகளை அவிழ்க்குமாறு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் இறுதிவரை நிற்பவரே இந்த வாரத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவர். இன்று வெளியான முதல் ப்ரோமோவில் தலைவர் டாஸ்க்கில் போட்டியிட்ட மூவரில் இறுதியில் மணிகண்டன் மற்றும் தனலட்சுமி இருவர் மட்டுமே நிற்கின்றனர். இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வார கேப்டனாகும் வாய்ப்பை பெறுவர்.
தனலட்சுமி ஏற்கனவே ஒரு முறை தலைவர் பதவி டாஸ்க்கில் தோல்வியடைந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளாமல், கதறி அழுந்தார். மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கும் அதில் நிச்சயம் நான் கேப்டன் ஆவேன் என்றெல்லாம் சவால் விட்டு இருந்தார். அதன் அடிப்படையில் இன்று அவர் எதிர்பார்த்த வாய்ப்பில் வெற்றி பெறுவாரா தனலட்சுமி என பார்வையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.