விஜய்டிவியில் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்க இதுவரை ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து, தற்போது 6 வது சீசன் நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிகழ்ச்சி ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்டு, குறைவான வாக்குகளின் அடிப்படையில் வாரம் ஒருத்தர் எவிக்ஷன் செய்யப்பட்டும், தற்போது 50 நாட்களை கடந்து சிறப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அதுபோன்று இந்த வார எவிக்ஷனில் 6 பேர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் 6 பேரில் குறைவான வாக்குகளின் அடிப்படையில் ஒருவர் எலிமினேட் செய்யப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் குயின்சி பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டு , வெளியேறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஏற்கனவே ஒரு வாரத்திற்கு இவ்வளவு சம்பளம் என பேசப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலன்ந்து கொண்ட குயின்சிக்கு வாரம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.