27.5 C
Tamil Nadu
28 May, 2023
CinemaCinema News

பிக்பாஸ் சீசன் 6 – இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் : போட்டியாளர்கள் அதிர்ச்சி..!

பிக்பாஸ் சீசன் 6 பரப்பான சூழல்களுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகிறார். அதன் அடிப்படையில் நேற்றைய எபிசோடின் இறுதியில் கமல் போட்டியாளர்களிடம் , அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருக்கு பாத்து விளையாடுங்க என கூறிச்சென்றார்.

இதனைக்கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியடைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப்போய் நின்றனர். சிலருக்கு டபுள் எவிக்‌ஷன் குறித்து மகிழ்ச்சி என்றாலும் சில போட்டியாளர்கள் டபுள் எவிக்‌ஷன் அவசியம் தேவை தானா என்ற கேள்வியின் அடிப்படையிலும் இருந்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி சரியாக எட்டு வாரங்கள் முடிவடைந்துள்ளது. நடிகர் கமலே நேற்றைய எபிசோடில் போட்டியாளர்கள் தற்போது தான் விளையாட தொடங்கியுள்ளார்கள். அதாவது இப்பொழுது தான் தங்களுக்காக மட்டும் விளையாடுவதில் மும்முரமாக இருந்து வருகிறார்கள் என்பதையும் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே சுட்டிக்காட்டியிருந்தார்.

See also  பிக்பாஸ் சீசன் 6 : இந்த வாரம் வெளியேறப்போகும் நபர்..!

இந்த வாரத்தலைவர் போட்டியில் ஷிவின்,தனலட்சுமி,மணிகண்டன் ஆகிய மூவரும் போட்டியிட்ட நிலையில் மணிகண்டன் தலைவர் போட்டியில் வெற்றுபெற்றுள்ளார். இதன் அடிப்படையில் மணிகண்டன் இந்த வாரம் வீட்டின் தலைவர் என்பதால் எவிக்‌ஷனில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய எபிசோடின் மூலம் ஷிவின், அசீம், விக்ரமன் ஆகிய மூவரும் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருவது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இவர்கள் மூவரும் பிக்பாஸ் போட்டியின் இறுதி வாரம் வரை பயணிப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டை விட்டு குயின்சி குறைந்த வாக்குகளை பெற்றதன் அடிப்படையில் வெளியேறினார். இதனை தொடர்ந்து நடிகர் கமல் அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாக போட்டியாளர்களிடம் தெரியப்படுத்தினார். இதனிடையே இந்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க்கில் ஷிவி, மணிகண்டன், தனலட்சுமி ஆகிய மூவரும் பங்கேற்றனர். இதில் மணிகண்டன் இந்த வாரத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே மணி இந்த வார எவிக்‌ஷனில் பங்கேற்க மாட்டார். மேலும் ரட்சித்தா மற்றும் தனலட்சுமி இருவரும் நாமினேஷன் ஃப்ரீ ஜோன் வாங்கியிருக்கிறார்கள்.

See also  பிக்பாஸ் சீசன் 6 : உஷாரான அமுதவாணன் - மைனாவுக்கு இவ்வளவு தான் சம்பளமா?

இருப்பினும் மக்கள் மத்தியில் டபுள் எவிக்‌ஷன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்படி எந்த இருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என! , நடிகர் கமல் டபுள் எவிக்‌ஷன் அறிவித்தது தொடர்ந்து போட்டியாளர்கள் தங்களது விளையாட்டை சுவாரஸ்யப்படுத்த திட்டமிட்டு வருகின்றனர். இதனிடையே டபுள் எவிக்‌ஷனுக்காக போட்டியாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான சண்டைகள் நடைபெற்றாலும் ஆதில் ஆச்சரியம் இல்லை என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts