உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களின் சண்டைகளுக்கிடையில் விறுவிறுப்பாக 54 நாட்களை கடந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது எவிக்ஷன். அதன்படி இந்த வாரம் எவிக்ஷனில் தேர்வானோர், கதிரவன்,குயின்ஸி, மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி, ஜனனி ஆகியோர் இந்த வார எவிக்ஷனை சந்திக்க உள்ளனர். எப்பொழுதும் நாமினேஷனில் இடம்பெறும் அசீம் , இந்த வாரம் வீட்டின் தலைவர் பதவியில் இருப்பதால் எவிக்ஷன் பக்கம் வரவில்லை.
இவர்கள் 6 பேரில் ஒருவர் மட்டுமே இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றதன் அடிப்படையில் வெளியேறுவார். அதன்படி கதிரவன் முதலில் சேவ் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து ஜனனி மற்றும் ரச்சித்தா இருவரும் சேவ் ஆவார்கள் என சொல்லப்படுகிறது. இதனிடையெ மைனா கடந்த வாரம் பொதுமக்களின் கேள்விக்கு புடிக்கவில்லை என்றால் வெளியில் அனுப்பிவிடுங்கள் என கூறியிருந்தார் அவர் குறைவான வாக்குகள் பட்டியலில் இருந்து சேவ் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தனலட்சுமியின் குரல் வீட்டில் ஆங்காங்கே ஒலித்துகொண்டே இருப்பதால் ரசிகர்கள் கடுப்பில் அவருக்கு வாக்களிக்காமல் தாமதம் செய்து வருகின்றனர்.
இந்த வரிசையில் குயின்ஸி தனலட்சுமியை விடவும் குறைவான வாக்குகளை பெற்று டேஞ்சர் ஜோனில் இருந்து வருகிறார். எனவே குயின்சி தான் இந்த வார எவிக்ஷனின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்துள்ளது.