விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 6 , மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ராம் வெளியேறியதுடன் , தற்போது 12 பேர் மீதமுள்ளனர். மேலும் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்பதால், ராம் நேற்று வெளியேறிய நிலையில் இன்று ஆயிஷா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்
மேலும் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கும் நிலையில், கமல் போட்டியாளர்களிடம் பெற்றோர்களை பற்றிக் கூறுங்கள் என கேட்கிறார் , அதற்கு போட்டியாளர்கள் மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் பதிலளித்து உள்ளனர்.
முதலில் மைனா, அவர்கள் இருவருமே என் அப்பா அம்மா கிடையாது அவங்க என் குழந்தைகள் என்கிறார், அதனை தொடர்ந்து அசீம் என்னதான் வெளியில் ஸ்டாராங்காக இருந்தாலும் உள்ளுக்குள் அந்த ஃபீலிங் இருக்கும் , எனக்கு அது எப்பொழுதுமே இருக்கும் என கண்கலங்கினார்.
அதனை தொடர்ந்து கதிரவன் , அவங்க போட்ட பிச்சையில் தான் நான் இங்கு இருக்கிறேன் என கண்கலங்குகிறார். போட்டியாளர்கள் பேசியது தொடர்ந்து கமல் எல்லாரும் அம்மா , அப்பா குறித்து பேசினீர்கள், எல்லாருக்கும் இந்த வாய்ப்பு கிடைக்காது, இதை தெளிவாக சொல்வதற்கு முன்னதாகவே நாம் அவர்களை இழந்து விடுவோம், அப்படி ஒரு குழந்தை தான் நானும், உங்களை பார்க்க பொறாமையாக இருக்கிறது, எனக்கூறி நடிகர் கமலும் கண்கலங்குகிறார். இந்த ப்ரோமோ வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.