விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக தொடங்கி நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சி ஆரம்ப கட்டத்தில் 21 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவற்பை பெற்று வந்தது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அசீம் மற்றும் விக்ரமன் இருவரிடமும் சக ஹவுஸ் மேட்ஸுகளுக்கு கருத்து வேறுபாடு இருந்து கொண்டே இருந்தது. அதன் பின் நாளாக நாளாக அசீம் மட்டும் பிக்பாஸ் வீட்டில் கார்னர் செய்யப்பட்டு வந்தார். இதனிடையே விக்ரமன் பல இடத்தில் அரசியல் குறித்து பேசுவதும் , தவறுகளை தட்டி கேட்பவருமாக மாறி வந்தார்.
இது போன்று பல சுவாரஸ்யங்கள் கலந்து ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக வெளியேற ஆரம்பித்தனர். ஆனால் விக்ரமன் மற்றும் அசீம் ஷிவினுக்கு மக்களிடையே அமோக வரவேற்பு இருந்து வந்தது.
இதில் பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமனே டைட்டிலை வெற்றி பெறப் போகிறார் என எதிர்பார்த்து ஆவலுடன் வாக்களித்து வந்தனர். அதுமட்டுமல்லாது பல அரசியல் கட்சித் தலைவர்கள் விக்ரமனுக்கு வாக்களிங்கள் என தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தனர். இவற்றையெல்லாம் பார்க்கும் பொழுது விக்ரமன் தான் டைட்டிலை வின்னர் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
ஆனால் மறுபக்கம் என்னதான் அசீமை பிக்பாஸ் வீட்டினுள் வெறுத்து ஒதுக்கினாலும் மக்களின் நாயகனாகவே ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வந்தார். அசீம் டைட்டிலை வெற்றி பெற வாய்ப்பில்லை அவர் எலிமினேட் ஆக தான் அதிகம் வாய்ப்பு இருப்பதாக வாரம் வாரம் சக போட்டியாளர்கள் கூறி வருவது வழக்கம். பிக்பாஸ் வீட்டினுள் இருந்த ஒட்டு மொத்த நாட்களிலும் அசீம் தனியாக விளையாடி மக்களின் மனதை வென்று டைட்டிலையிலையும் வென்று உள்ளார்.
இதில் விகரமன் இரண்டாவது இடத்தையும், ஷிவின் மூன்றாவது இடத்தையும் கைப்பற்றினர். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு விக்ரமன் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் என்னை மதித்து உங்கள் அன்பை கொடுத்த அனைவருக்கும் நன்றி, நான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு தான் தெரிகிறது என்னை அனைவரும் எவ்வளவு நேசிக்கிறார்கள் என்று, எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றி, என் மீது அன்பு செலுத்திய அனைவருக்கும் நன்றி என , அறம் வெல்லும் என நான் வீட்டினுள் கூறியிருந்தேன் அதனை நீங்களும் ஏற்று கொண்டு , பொங்கல் அன்று வீட்டில் வாசலில் கோலம் மூலமாக அறம் வெல்லும் என போட்டு இருந்தது என்னை மிகவும் வியப்படைய செய்தது. நிச்சயம் அறமே வெல்லும், உங்கள் அனைவரையும் விரைவில் சந்திக்கிறேன் என கூறி வீடியோ பதிவிட்டு இருந்தது மக்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று வைரலாகி வருகிறது.