விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இறுதிகட்ட நாட்களை போட்டியாளார்கள் கடந்து வரும் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தில அடியெடுத்து வைத்துள்ளது. இதில் அமுதவாணன் நேரடியாக இறுதி வாரத்திற்கு சென்று விட்டார், மீதம் யார் இறுதி கட்டத்தில் அடியெடுத்து வைக்கப்போகிறார்கள் என மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்ற இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு இதற்கு முன்னதாக வெளியேறிய போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வருகின்றனர்.
இதில் முதலாவது கெஸ்ட்டாக அகமது மீரான் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி எண்ட்ரி ஆனார்கள் இவர்களுக்கு பின் ஷோபனா மற்றும் பார்வதி போன்றோர் வருகை தந்தனர். இவர்களை தொடர்ந்து தற்போது ராபர்ட் மாஸ்டர் , அசல் , ஜிபி முத்து மற்றும் சாந்தி உள்ளோட்டோ பிக்பாஸ் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனதால் நேற்று முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி கலைகட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று தனலட்சுமி மற்றும் மணிகண்டன் இருவரும் பிக்பாஸ் வீட்டிற்கு வருகைத்தந்துள்ளனர். தனலட்சுமியி எண்ட்ரி ப்ரோமோ ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் மற்றும் மைனா இருவருக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருந்தது.
அதில் மாஸ்டர் மைனாவிடம் நான் போனதுக்கு அப்றம் ரச்சித்தாவுக்கு ஃபோகஸ் கம்மி ஆகிடுச்சு என கூறுகிறார், இதற்கு மைனா தெரிவித்ததாவது நீங்க பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ரச்சித்தாவையே பார்த்து கொண்டு இருப்பீர்கள் எங்களுக்கு பார்க்க ரொம்பவும் சுவாரஸ்யமா இருக்கும். அவளுக்கு அதுல தப்பா தெரிஞ்சு இருந்து இருந்தா நிச்சயம் உங்க கிட்ட சொல்லியிருப்பா வெளியே இப்படி எல்லாம் பேசிக்கிட்டு இருக்காங்கன்னு அவளுக்கு தெரியாதுல எனக்கூறி நிறைய விஷயங்களை இருவரும் கலந்துரையாடி வருவது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
previous post