26.7 C
Tamil Nadu
04 Jun, 2023
CelebritiesCinemaCinema NewsGossipsMovie ReviewMovie TrailerMoviesTelevision

பிக்பாஸ் சீசன் 6 :- பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறும் போட்டியாளர்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி வாரத்தை நெருங்கி வருகிறது. 21 போட்டியாளர்களுடன் சுவாரஸ்யமாக தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கும் நேரத்தில் அதாவது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்கப்போகும் கடைசி வாரத்தில் அவர்களுக்கு பணப்பெட்டி அனுப்பப்படும் , அதனை போட்டியாளர்களில் ஒருவர் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பது விதிமுறை.

இதனிடையே பிக்பாஸ் வீட்டில் இருந்து வரும் 7 பேருமே பணப்பெட்டி மீது அதிக ஆர்வம் காட்டாதது போல தான் இருக்கிறது. வீட்டினுள் இருக்கும் வரை மணிகண்டன் தான் அதிகமாக பணப்பெட்டி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தார். அவரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது அப்பெட்டியை யார் தான் எடுக்க உள்ளார்கள் என்ற கேள்வி பெரிய விவாதமாகவே நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் அமுதவாணன் இறுதி வாரத்திற்கு நேரடியாக தகுதிபெற்றதால் அவர் எடுக்க வாய்ப்பில்லை எனவும், ஷிவின் விக்ரமன் எடுக்கவும் அறவே வாய்ப்பில்லை எனக்கூறப்படும் நிலையில் , மைனா ஏற்கனவே பணப்பெட்டி வந்தால் நான் அதனை கண்டு கொள்ளக்கூட மாட்டேன் என தெரிவித்து இருந்தார் ஆகையால் அவர் எடுக்கவும் வாய்ப்புகள் குறைவு.

மீதமிருப்பவர்கள் ஏடிகே, அசீம் மற்றும் கதிர் இதில் அசீம் எடுக்க வாய்ப்பே இல்லை என்பதால் பார்வையாளர்களின் கவனம் ஏடிகே மற்றும் கதிரவன் பக்கம் திரும்பி வருகிறது. இருப்பினும் பெரும்பாலான மக்களின் கருத்து ஏடிகே தான் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியில் செல்வார் என கூறி வருகின்றனர்.

See also  பிக்பாஸ் சீசன் 6 :- நீங்களாவே கற்பனை பண்ணிக்காதீங்க, அது ஒரு நாளும் நடக்காது ! ஷிவினிடம் விக்ரமன் ஆவேசம்..!

Related posts