விஜய்டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 , விறுவிறுப்பாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.
இந்த வாரம் தற்போது போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து ஏலியன்கள் போன்றும், ஆதிவாசிகள் போன்றும் விளையாடி வருகின்றனர். இந்த டாஸ்க் இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று முதல் தற்போது வரை அசீம் மற்றும் அமுதவானனுக்கிடையில் பல பிரச்சனைகள் உருவாகி இருவரும் அடிக்கடி சண்டையிட்டு கொள்கின்றனர்.
நேற்றைய நாளில் அசீம் மற்றும் அமுதவானனுக்கிடையில் பல பிரச்சைனகல் உருவாகி வந்த நிலையில், அதன் அடுத்த கட்டமாக இன்றைய புரோமோவிலும் அவர்கள் குறித்த காட்சியே இடம்பெற்றுள்ளது. இன்றைக்கு வெளிவந்த பிக்பாஸ் புரோமோவில் , அசீம் ஏலியன்களின் பூவை எடுத்துக்கொண்டு அதனை தேவைப்படாது எனக்கூறி பாத்ரூமில் வைக்கிறார், இதனை வைத்துவிட்டு அசீம் கேமரா முன் நின்று இது குறித்து கூறி விட்டு அமுதவானனிடமும் சொல்கிறார்.
இதற்கு பதிலடியாக அமுதவாணன் ஒரு பொம்மை செய்து அதனிடம் இதைப்பற்றி கூறும் பொழுது அதனை எடுத்துக்கொண்டு போய் வைத்தவருக்கு இரத்தம் வரும் என கூறியிருந்தார் . அதனை தொடர்ந்து அசீம் தன் கைகளை அமுதவாணனிடம் நீட்டி எனக்கு ரத்தம் வந்து விட்டது எனக்கூறி நக்கல் அடிக்கிறார், இதனைக்கண்டு பயந்து போன சக போட்டியாளர்களும் அசீமை கண்டு ஓட்டம் பிடிக்கின்றனர். இப்படிப்பட்ட புரோமோ வெளியானது முதல் ரசிகர்களின் கவனத்தை அதிகமாக கவர்ந்து வருகிறது.