விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 மக்களிடையே நாளுக்கு நாள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால் சுவாரஸ்யம் மிகுந்த பரபரப்புடன் பிக்பாஸ் போட்டியாளர்கள் நாட்களை கடந்து வருகின்றனர்.
இதனை தொடர்ந்து இன்றைய நாளின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகமாக பெற்று வருகிறது. வெளியான ப்ரோமோவில் முழுக்க முழுக்க சண்டைக்காட்சிகள் மட்டுமே இடம்பெற்றிருந்தது. நேற்றுடன் கனா காணும் காலங்கள் டாஸ்க் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று பத்து போட்டியாளர்களுக்கான இடமும் ராக்கிங்-கும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் ஒன்று முதல் பத்துக்குள் தங்களை வரிசைப்படுத்திக் கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவித்திருந்தது. இதனிடையே அசீம் சென்று முதலிடத்தில் நின்று கொள்கிறார். இதன் மூலம் இன்று போட்டியாளார்களுக்குள் கடும் சண்டை நிகழ்வதற்கான அறிகுறிகள் இன்றைய ஷோவினுடைய ப்ரோமோக்களை வெளியிடுவதிலேயே தெரிகிறது.
இதில் போட்டியாளர்கள் தனக்கென ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து நிற்பதற்கு ஏகப்பட்ட நெருக்கடிகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் அடிப்பட்டு கொண்டிருக்கின்றனர். இதில் இன்று காலை முதல் வெளியான ப்ரோமோக்கள் அனைத்திலுமே இடம்பெற்றிருப்பதில் சண்டைக்காட்சிகள் தான் அதிகம். இதில் முதலில் ஷிவின் அசீம் எனத்தொடங்கிய சண்டை ஷிவின் ஏடிகே , விக்ரம் அசீம் என மாறி மாறி சண்டையிட்டு கொள்கின்றனர். இதனிடையே இன்றைய நாளின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது அதில் அசீமிற்கும் , தனலட்சுமிக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடைபெறுகின்றன. இன்றைய ப்ரோமோக்களிலே இவ்வளவு சண்டை காட்சிகள் இடம்பெற்றிக்கும் நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் கடுமையான சண்டைகளை எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
next post