பிக்பாஸ் சீசன் 6 தொடங்கிய நாள் முதல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
மேலும் இந்த வார நாமினேஷனில் ரெட் கார்ட் அடிப்படையில் ரட்சித்தாவை தவிற அனைவரும் எவிக்ஷனை சந்திக்க இருக்கின்றனர். இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்பது ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பை கொடுத்து வருகிறது.
இதையடுத்து Freeze டாஸ்க், தொடங்கிய நிலையில் போட்டியாளர்களின் குடும்பத்தாரர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வருகைத்தருகின்றனர். இதில் நேற்று மைனா மற்றும் ஷிவின் , அமுதவானன் ஆகிய மூவரின் குடும்பத்தில் இருந்து வருகைத்தந்தனர். இதனை தொடர்ந்து இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் மணியின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகின்றனர். இதில் மணியின் மனைவி சோஃபியா , மகன் ஆர்யன் மற்றும் தாய் என மூவருடன் மணியின் தங்கையான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் -ம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். இந்த ப்ரோமோ வெளியாகி தற்போது மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.