பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட நிகழ்ச்சியில் தற்போது 9 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம். அதில் கடந்த வாரம் ஜனனி வெளியேறி இருந்தார். அதனை தொடர்ந்து இந்த வாரம் தனலட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேறியதை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். தனலட்சுமி வெளியேறிய பொழுது நடிகர் கமல், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை மிகவும் சுவாரஸ்யமாக எடுத்து விளையாடிய நபராக தான், நான் உங்களை பார்க்கிறேன் , சிறப்பாக விளையாடுனீர்கள் , இந்நிகழ்ச்சியை ஊக்குவிக்கும் முறைகளில் செயல்பட்டு வந்தீர்கள் நாம் வெளியில் சந்திப்போம் என்றார்.
இவையெல்லாம் ஒருபுறமிருந்தாலும் , நன்றாக விளையாடிக் கொண்டிருந்த தனலட்சுமி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதை ஏற்றுக்கொள்வது என்பது சற்று கடினம் தான். பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற தனலட்சுமி , வீட்டை விட்டு வெளியேறிய பொழுது இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பிக்பாஸுக்கு மட்டியிட்டு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அசீமிடம் பேசிய தனலட்சுமி நீங்க அழுததை நான் பார்த்தேன், எதைப்பற்றியும் கவலைக்கொள்ளாமல் விளையாடுங்கள் , அப்பொழுது தான் வெற்றியை அடைய முடியும் எனக்கூறி இருந்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிக்பாஸ் வீட்டை விட்டு தனலட்சுமி வெளியேறிதால், ரசிகர்கள் , சமூக வலைத்தளப்பக்கத்தில் நல்லா விளையாடுறவங்கள எல்லாம் வீட்ட விட்டு அனுப்பிட்டு யாருக்குடா டைட்டில் கொடுக்க போறீங்க என பதிவிட்டு வருகின்றனர்.