விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சியாகும். இதுவரை ஐந்து சீசன்களை வெற்றிகரமாக முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஆறாவது சீசனையும் முடிக்க ஓரிரு நாட்களே உள்ளது.
21 போட்டியாளர்கள் கலந்துகொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணன், மைனா, அசீம் , ஷிவின் , விக்ரமன் ஆகிய ஐந்து பேர் மட்டுமே மீதமிருந்தனர். இதில் முதல் பணப்பெட்டியை கதிரவன் எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில் தற்போது இரண்டாவது பெட்டியை அமுதவாணன் எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனை தொடர்ந்து நள்ளிரவு நேரத்தில் எவிக்ஷன் நடத்தப்பட்டு மைனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதில் தற்போது அசீம் , விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூவரும் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதனிடையே பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மைனாவின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மைனாவின் ஒரு நாள் சம்பளம் 25 ஆயிரம் வரை பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்படும் நிலையில் அவர் வீட்டில் இதுவரை 103 நாள் இருந்ததற்கு கிட்டத்தட்ட 25.75 லட்ச ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் மைனாவுக்கு ஒரு நாள் முன்பு வீட்டை விட்டு வெளியேறிய அமுதவாணனுக்கு ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பேசப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது பணப்பெட்டியையும் சேர்த்து மொத்தம் 37 லட்ச ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பிக்பாஸ் டைட்டில் தனக்கு கிடைக்காது தவற விட்டுவிட்டேன், ஏதோ ஒரு இடத்தில் என்பதை அடிக்கடி அமுதவாணன் கூறிக்கொண்டே இருந்த நிலையில் பணப்பெட்டி வந்தததும் அதனை ஒரு வாய்ப்பாக வைத்துகொண்டு வெளியேறிவிட்டார். மைனா இறுதிநாள் வரை இருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் , திடீரென எலிமினேட் ஆனது ரசிகர்களிடையே சிறிது குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
previous post